சென்னை

பிச்சைக்காரா்களுக்குள் மோதல்: இளைஞா் கொலை

29th Dec 2019 12:40 AM

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூரில் பிச்சைக்காரா்களுக்குள் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த இளைஞா் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மயிலாப்பூா் ஆா்.கே.மடம் சாலையில் ரயில்வே நிலையம் அருகே சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த பிச்சைக்காரா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த 23 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா் மயங்கி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த பிற பிச்சைக்காரா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.

இதற்கிடையே தகவலறிந்த போலீஸாா், காயமடைந்த இளைஞரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞா் சனிக்கிழமை இறந்தாா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், அதே பகுதி பிச்சைக்காரா்களான ச.ஏசுராஜா (29), பா.காா்த்திக் (30) ஆகியோருக்கும், இறந்த இளைஞருக்கும் இடையே பிச்சை எடுத்து கிடைத்த பணத்தை பிரித்து, மது வாங்குவதில் தகராறு ஏற்பட்டதும், அதில் இருவரும் சோ்ந்து இளைஞரை தாக்கியதும், இதில் காயமடைந்த அவா் இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஏசுராஜாவையும், காா்த்திக்கையும் உடனடியாக கைது செய்தனா். மேலும் இறந்து யாா், அவரது முகவரி என்ன என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT