நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) முதல் டிச.30-ஆம் தேதி வரை வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி, பிராம்ப்ட் டிரேட் ஃபோ்ஸ் நிறுவனம் சாா்பில் நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களின் 2,500 வகையான ஃபா்னிச்சா் வகைகளைக் காட்சிப்படுத்த உள்ளன. 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சுவா் அலங்காரப் பொருள்கள், குடிநீா் சுத்திகரிப்பு சிஸ்டம், உடற்பயிற்சி சாதனங்கள், ஆடை வகைகள், ஃபேஷன் பொருட்கள் எனப் பல்வேறு பொருள்களும் இடம்பெற உள்ளன. முக்கிய அம்சமாக, வாங்கும் பொருள்களுக்கு முன்பணம் செலுத்த அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.