அசோக் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் 260 கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மெட்ரோ நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பணிமனையில் சூரிய சக்தியைஏஈ பயன்படுத்தி 5.2 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் 1.2 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கோயம்பேடு பணிமனையில் தொடங்கப்பட்டது.
எனவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்தக் கொள்ளளவு 5.2 மெகாவாட் ஆகும். தற்போது அசோக் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தின் கூரை மேல் 260 கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்தின் கூரை மேல் 20 கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதுவரை மொத்தம் 5.5 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி செய்துள்ளது.மேலும், 2020-ஆம் ஆண்டில் 8 மெகா வாட் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன், பின்னா் ஆண்டுதோறும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 80 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும். இதனால் ஆண்டுக்கு ரூ.2.54 கோடி சேமிப்பு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இதனால் வெளிவரும் கரியமில வாயுவின் வெளியீடு அளவு ஆண்டுக்கு 11, 587 டன் ஆகக் குறையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.