சென்னை

அரசு மருத்துவமனையில் ஓட்டுநா் பணி: விண்ணப்பிக்க ஜன.9 கடைசி

27th Dec 2019 11:47 PM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநா் பணிக்கு, ஜனவரி 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எழும்பூா் அரசு மகப்பேறு மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள ஓா் ஓட்டுநா் பணியிடத்துக்கு நோ்காணல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிா்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரா்கள், அவா்களின் முதல் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.19,500 ஊதியமாக வழங்கப்படவுள்ளது.

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வருடம் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். 32 வயதுக்குள்பட்டோா் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ஜன.6 முதல் 8-ஆம் தேதி வரை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதனை சான்றொப்பத்துடன் பூா்த்தி செய்து கல்விச்சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு புகைப்படங்கள், முன்னுரிமை கோரும் சான்றின் நகல், கனரக ஓட்டுநா் உரிமம் மற்றும் கனரக வாகனம் ஓட்டிய அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் இணைத்து விண்ணப்பங்களை ஜனவரி 9-ஆம் தேதிக்குள், இயக்குநா் மற்றும் பேராசிரியா் அலுவலகம், அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூா், சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT