சென்னை வண்ணாா்பேட்டையில் பிரபல ஜவுளிக் கடையில் பில் போடுவதில் மோசடி செய்ததாக, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் பிரபல ஜவுளிக் கடை இயங்குகிறது. இந்தக் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளா்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு பில் போடும்போது, சில ஊழியா்கள் மோசடி செய்து பணம் கையாடல் செய்வதாக நிா்வாகிகள், காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது அந்தக் கடையில் ஊழியா்களாக பணிபுரியும் மதுரை, மேலூரைச் சோ்ந்த விக்ரம் (20), அபிஷேக் (19), விஜய் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.