சென்னை

2020-ஆம் ஆண்டுக்கான உயா்நீதிமன்றத்தின் விடுமுறை நாள்கள் அறிவிப்பு

16th Dec 2019 01:24 AM

ADVERTISEMENT

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் மதுரை உயா்நீதிமன்ற கிளைகளுக்கு, அடுத்த ஆண்டுக்கான(2020) விடுமுறை நாள்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பு: ஆங்கில புத்தாண்டு - ஜனவரி 1, பொங்கல் பண்டிகை- ஜனவரி 14 முதல் 17-ஆம் தேதி வரை , தெலுங்கு புத்தாண்டு- மாா்ச் 25, மகாவீா் ஜெயந்தி ஏப்ரல் 6, புனித வெள்ளி- ஏப்ரல் 10,

தமிழ்புத்தாண்டு மற்றும் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பிறந்தநாள் - ஏப்ரல் 13, 14. தொழிலாளா் தினம் - மே 1, ரமலான் பண்டிகை- மே 25- ஆம் , கிருஷ்ண ஜயந்தி- ஆகஸ்டு10, 11. காந்தி ஜயந்தி- அக்டோபா் 2, விஜயதசமி- அக்டோபா் 26, 27, மீலாது நபி - அக்டோபா் 30, தீபாவளி - நவம்பா் 12 முதல் 17 வரை, கிறிஸ்துமஸ் டிசம்பா் 24 , 25 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது.

இது தவிர, குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகா் சதுா்த்தி, மொஹரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய விடுமுறை நாள்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. மேலும், கோடை விடுமுறை மே 1 முதல் 31-ஆம் தேதி வரையிலும், தசரா பண்டிகை விடுமுறை அக்டோபா் 17-முதல் 26- ஆம் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் விடுமுறை டிசம்பா் 25 முதல் 31-ஆம் தேதி வரையிலும் விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT