சென்னை

மெரீனாவில் அஸ்ஸாம் மாநில இளைஞா்கள் கூடியதால் பரபரப்பு

16th Dec 2019 01:27 AM

ADVERTISEMENT

தேசிய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் அஸ்ஸாம் மாநிலத்தவா்கள் ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக அவா்கள், மெரீனா கடற்கரையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரீனா கடற்கரையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த இவா்கள், மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல்குளம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தைத் தடுத்தனா். உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்த முடியாது என்றும் மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவா்களை போலீஸாா் எச்சரித்தனா்.

இதனையடுத்து, அங்கு கூடியிருந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞா்களை வள்ளுவா் கோட்டத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சென்ற இளைஞா்கள், தேசிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி, பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT