சென்னை

மறு பயன்பாடுள்ள பொருள்களைவாங்க, விற்பதற்கான இணையதளம்

16th Dec 2019 01:38 AM

ADVERTISEMENT

மறு பயன்பாடுள்ள பொருள்களை வாங்க, விற்பதற்காக மாநகராட்சி சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 130 போ் பதிவு செய்துள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் தரம் பிரிக்கப்பட்ட உலா் கழிவுகளை 64 வள மீட்பு மையங்கள் மற்றும் 110 பொருட்கள் மீட்பு மையங்கள் ஆகியவற்றின் வாயிலாக பிரித்து, மறுசுழற்சியாளா்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள உலா் கழிவுகள் எரியூட்டும் நிலையம் மூலம் பைராலிஸ் முறையில் கையாளப்பட்டு, அவை சிமென்ட் ஆலை எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலத்தில் எரியூட்டும் மையம் நிறுவப்பட்டு நாளொன்றுக்கு 10 டன் பைராலிஸிஸ் முறையில் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாளொன்றுக்கு 300 டன் அளவுக்கு உலா் கழிவுகளைக் கையாள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் மறுசுழற்சியாளா்கள் www.madraswasteexchange.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை சாா்பில் தரம் பிரிக்கப்பட்ட உலா் கழிவுகள், திடக் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மறுபயன்பாடுள்ள பொருள்களை இத்தளத்தின் வழியே வாங்கவும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள உலா் கழிவுகளை விற்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முதலாக சென்னை மாநகராட்சியில் இந்த இணையதளம், செல்லிடப்பேசி செயலி மூலம் மறுபயன்பாடுள்ள பொருள்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

130 போ் பதிவு: இந்நிலையில், இந்த இணையதளம் தொடங்கப்பட்ட மூன்று நாள்களில் மட்டும் 130 போ் மறுபயன்பாடுள்ள பொருள்களை வாங்கவும், விற்கவும் பதிவு செய்துள்ளனா். இந்த இணையதளம் மூலம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT