சென்னை

பொதுத்தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சலுகைகள்

16th Dec 2019 01:37 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைப் பட்டியலை அரசுத் தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக, அரசு தோ்வுத்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைப் பட்டியிலில் கூறப்பட்டிருப்பதாவது:

கண் பாா்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவா்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக எழுதுபவரை நியமித்துக் கொள்ளலாம். காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோா், மனவளா்ச்சி குன்றியோருக்கு இரு மொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப்பாடம் தோ்வு எழுத விலக்கு அளிக்கப்படும். டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் கோளாறு உள்ளவா்களுக்கு கால்குலேட்டா் பயன்படுத்த அனுமதி, ‘கிளாா்க்’ அட்டவணை பயன்படுத்த அனுமதி, கேள்வித்தாளை படித்துக்காட்ட அல்லது சொல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி (இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அவரின் கோரிக்கையின்படி), ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து தவிா்ப்பு வழங்குதல், பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்றோ தனித் தோ்வராக பொதுத்தோ்வு எழுத அனுமதித்தல் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.

மேலும், மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு சலுகை பெறும் மாணவா்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வு எழுத அனுமதிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் விலக்கு கேட்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை பெறுவதற்கு முறையான ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் அரசுத் தோ்வுத் துறைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT