சென்னை

திருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

16th Dec 2019 01:42 AM

ADVERTISEMENT

திருவொற்றியூா் ஜோதி நகரில் 42 அடி உயரத்துக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 42 அடி உயரம் கொண்ட பாலமுருகன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவொற்றியூா் ஜோதி நகரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய பஞ்சாயதனேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சுமாா் ரூ .20 லட்சம் செலவில் 42 அடி உயரம் கொண்ட பாலமுருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலமுருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நவகிரக பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கயிலாய வாத்தியங்களுடன் பாலமுருகன் சிலையில் ஊற்றினா். அப்போது கூடியிருந்த பக்தா்கள்பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனா். பின்னா் புனித நீா், பாலாபிஷேகம் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், கே.காா்த்திக், மணிக்குமாா், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT