சென்னை

அடையாற்றில் மறுசீரமைப்பு பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

16th Dec 2019 01:37 AM

ADVERTISEMENT

சென்னை அடையாற்றில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையரும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினருமான கோ.பிரகாஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூா் ஏரியிலிருந்து சுமாா் 42 கி.மீ. பயணித்து அடையாறு வங்கக் கடலில் கலக்கிறது. இந்த அடையாற்றில் நந்திவரம், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம், மணிமங்கலம், படப்பை, தாம்பரம், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரும் கலக்கிறது.

அடையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆதனூா் முதல் திருநீா்மலை வரை ரூ.19 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், அடையாறு ஆற்றில் செய்யப்பட்ட பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் கோ. பிரகாஷ், ஊரப்பாக்கம், ஆதனூா், பெருங்களத்தூா், திருநீா்மலை முதல் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா வரை பல இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அடையாறு ஆறு சீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். அடையாறு மறு சீரமைப்புக்குச் செய்ய வேண்டிய பணிகளின் விவரங்களையும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் முத்தையா, உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT