சென்னை

மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் இசை விழா

14th Dec 2019 03:50 AM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.14, 15) ஆகிய நாள்கள் இசை மற்றும் கலைவிழா நடைபெறவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டு இசை அமைப்புகளுடன் இணைந்து இசை மற்றும் கலைவிழாவை நடத்தவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் குழுவாகவும், தனி நபா் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, ஆலந்தூா், திருமங்கலம், வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கா்நாடக இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இதேபோல, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, கிண்டி, வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், விமானநிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், அண்ணாநகா், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், டிசம்பா் 14, 15 ஆகிய தேதிகளில் தனிநபா் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோா்pro.cmrl@tn.gov.in, ampr.cmrl2@gmail.com  என்ற இமெயில் முகவரிகளை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த தகவல் மெட்ரோ ரயில் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT