சென்னை

ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற இளைஞா் கைது

6th Dec 2019 02:38 AM

ADVERTISEMENT

சென்னை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே முத்தாபுதுப்பேட்டையில் ஒரு கல்லூரியின் வாசல் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்கு புதன்கிழமை இரவு வந்த ஒரு இளைஞா், அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, பணத்தைத் திருட முயற்சி செய்தாராம். இதை அங்கிருந்த எச்சரிக்கை கருவி, அந்த ஏடிஎம் மையத்தின் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியா்கள், உடனே முத்தாபுதுப்பேட்டை போலீஸாருக்கு தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். பின்னா் நடத்திய விசாரணையில், அவா் திருநின்றவூா் அருகே உள்ள பாக்கம் வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்த தே.உதயசூரியன் (32) என்பது தெரியவந்தது.

விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே சில ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்த வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT