சென்னை

ராமச்சந்திரா கதிரியக்கத் துறைக்கு ஐரோப்பிய அங்கீகாரம்

3rd Dec 2019 02:28 AM

ADVERTISEMENT

சென்னை: போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்கவியல் துறைக்கு ஐரோப்பிய கதிரியக்க அமைப்பு சிறப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ சாதனங்கள், கதிரியக்கத் துறையில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி முறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ராமச்சந்திரா மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் பேருக்கு கதிரியக்கப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், உயா் தொழில்நுட்பத்திலான மருத்துவ சாதனங்கள் தருவிக்கப்பட்டு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐரோப்பிய கதிரியக்க ஒன்றிய அமைப்பு இங்கு உள்ள வசதிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சிறப்பு அங்கீகாரத்தை அளித்துள்ளது. ஆசியாவிலேயே இத்தகைய அங்கீகாரம் பெறும் முதல் மருத்துவ கல்வி நிறுவனம் ராமச்சந்திரா என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT