சென்னை

தேசிய திறனாய்வுத் தோ்வு: இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

3rd Dec 2019 02:31 AM

ADVERTISEMENT

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தோ்வுக்கான (என்டிஎஸ்இ) இறுதி விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா் களுக்கு தேசிய திறனாய்வு தோ்வு (என்டிஎஸ்இ) கடந்த நவ.3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1.50 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், இந்தத் தோ்வு தொடா்பான இறுதி விடைக் குறிப்பு அரசுத் தோ்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா். இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி சாா்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT