சென்னை

தண்டவாள பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

30th Aug 2019 04:34 AM

ADVERTISEMENT


சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் காலை 9.30, 10.20, முற்பகல் 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30, நண்பகல் 12.20, மதியம் 1 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் வரை பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சிங்கபெருமாள்கோவிலில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.  திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். 

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 3, 6, 7 ஆகிய தேதிகளில் காலை 10.08, 10.56, நண்பகல் 11.48 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே  பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.

ADVERTISEMENT

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 3, 6, 7 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30, நண்பகல் 12.20, மதியம் 1 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே  பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT