சென்னை

3.5 கிலோ தங்கம் கடத்தல்: 4 பேர் கைது

28th Aug 2019 04:24 AM

ADVERTISEMENT


வெளிநாடுகளில் இருந்து வந்த விமானப் பயணிகள் நால்வரின் குடலில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சுங்கத்துறையினர் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். இதில் நால்வர் தங்கத்தை ரப்பர் உறையில் வைத்து விழுங்கி துபை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. மொத்தம் 3.5 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT