சென்னை

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் கைது

28th Aug 2019 04:23 AM

ADVERTISEMENTசென்னை அயனாவரம் பொன்னுவேல்புரத்தைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர், திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் இருந்த இளம்பெண் சர்மிளா கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சர்மிளா சப்தம் போட்டதைக் கேட்ட பொதுமக்கள், அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று மடக்கினர். ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆட்டோவில் இருந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து, அயனாவரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் அவர் ஆந்திராவைச் சேர்ந்த அர்ச்சனா (24) என்பது தெரியவந்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அர்ச்சனாவை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT