பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராயப்பேட்டை ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நெகிழிகளை தவிர்ப்பது, டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக ஏடிஎஸ் வகை கொசுக்களைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுகாதாரம் குறித்து மாணவிகளுக்கு போட்டி நடத்தப்பட்டது.
மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.