சென்னை

தர நிர்ணய ஆணைய  மண்டல துணைத் தலைமை இயக்குநர் பொறுப்பேற்பு

27th Aug 2019 04:27 AM

ADVERTISEMENT


தென் மண்டல இந்திய தர நிர்ணய ஆணையத்தின், புதிய துணைத் தலைமை இயக்குநராக கலைவாணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். 
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 
இந்திய தர நிர்ணய ஆணையத்தின் தென் மண்டல அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தின் புதிய துணைத் தலைமை இயக்குநராகவும், ஜி-நிலை விஞ்ஞானியாகவும் கலைவாணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். முன்னதாக, புதுதில்லியில் துணை தலைமை இயக்குநர் (ஆய்வகம்), துணைத் தலைமை இயக்குநர் (நுகர்வோர் விவகாரங்கள்), துணை தலைமை இயக்குநர் (ஹால்மார்க்) ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT