சென்னை

செப்.7- இல் பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த் திருவிழா

27th Aug 2019 04:30 AM

ADVERTISEMENT


பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்த் திருவிழா, செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறுகிறது. 
இதுகுறித்து   அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை  கூறியது: 
சென்னை, மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியால் கொடியேற்றப்பட்டு ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா, ஆகஸ்ட் 29 -ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 
திருவிழா நடைபெறும் 9 நாள்களும் ஒவ்வொரு பேராயர்கள் கலந்து கொண்டு சிறப்புத் திருப்பலியை நிறைவேற்ற உள்ளனர். ஒரு நாள் புனித தினம், இளைஞர்களுக்கான தினம், நோயாளிகளுக்கான தினம் என பல்வேறு பக்த சபைகளின் நாள்களாக சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும். 
விழாவில் முக்கிய நாளான செப்டம்பர் 7 -ஆம் தேதி மாலை அன்னையின் ஆடம்பர தேர்திருவிழா நடைபெறும். 
அன்னையில் பிறந்த நாளான 8 -ஆம் தேதி, அன்னைக்கு முடிச்சூட்டு விழாவும் நடைபெறும். இந்தத் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு குடிநீர், தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்து வசதியும் செய்யப்பட்டு உள்ளன. 
இதற்கு பொதுப் பணித்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்புத் தருவதாக கூறியுள்ளனர்.
இந்தத் திருவிழாவில் 3 முதல் 5 லட்சம் வரையிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT