முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டம்: 1,057 பேர் மனு

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட தாலுகாக்களில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்களில் பொதுமக்கள் 1,057 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.


சென்னை மாவட்டத்துக்குள்பட்ட தாலுகாக்களில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்களில் பொதுமக்கள் 1,057 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
மக்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 
அதன்படி, சென்னையில் உள்ள 16 வட்டங்களில்  முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைந்தகரை வட்டத்தில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி கலந்துகொண்டார். 
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 வட்டங்களில் நடைபெற்ற முகாமில் 1,057 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு காணப்படும். இந்த குறைதீர் முகாம் விடுமுறை நாள்கள் நீங்கலாக ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com