வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

கழிவுநீர் உள்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி  ஒதுக்கீடு

DIN | Published: 23rd August 2019 04:27 AM


சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுசூழல் சீரமைப்பு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கூவம் அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனைச் சேர்ந்த முக்கிய நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகள் அமைத்தல், புனரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், தற்போது சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளைப் புதுப்பித்து வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைக்கும் அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பரபரப்பு: நிறுவனத்தின் மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் பெண் ஊழியர் தற்கொலை
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
பேராசிரியைகளின் நெருக்கடி.. தற்கொலை செய்யப்போவதாக மாணவி ஆடியோ வெளியீடு
மாடியில் இருந்து குதித்து பெண் பொறியாளர் தற்கொலை
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: சென்னையில் விசாரணை