ஆவடி டேங்க் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவடி டேங்க்  தொழில்சாலை  ஊழியர்களின் ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டம்
ஆவடி டேங்க் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவடி டேங்க்  தொழில்சாலை  ஊழியர்களின் ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: தமிழகத்தில் 6 தொழிற்சாலைகள் உள்பட இந்தியா முழுவதும்  பாதுகாப்புத் துறைக்கான  தளவாடங்கள் தயாரிக்கும் 41 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 82 ஆயிரம் நிரந்தத் தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனங்களை பொதுத் துறை நிறுவனமாக்கி பின்னர் தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது இதுதொடர்பான வரைவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புத் துறை தொழிலாளர்களின் அனைத்து சம்மேளனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்கள் கூட்டாக செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை  ஒருமாத தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்தன.
அதன்படி,   ஆவடியில் உள்ள படைத் துறை உடைத்தொழிற்சாலை, டேங்க் தொழில்சாலை மற்றும் என்ஜின் தொழிற்சாலை ஆகியவற்றில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை   தொடங்கினர். ஆவடியில் உள்ள  என்ஜின் தொழிற்சாலை முன்பு  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் பதற்றமும் பரப்பரப்பும் காணப்பட்டது. போராட்டம் காரணமாக தொழிற்சாலைகள் முன் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com