ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தியின்போது ரசாயனத்தால் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 

விநாயகர் சதுர்த்தியின்போது ரசாயனத்தால் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை ஒட்டி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.

இந்த சிலைகளை எத்தகைய பொருள்கள் கொண்டு தயாரித்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்படும் சிலைகள் களிமண் மற்றும் ரசாயனம் கலக்கப்படாத மரவள்ளிக்கிழங்கு, ஜவ்வரிசி கழிவுகளால் தயார் செய்யப்பட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.

இந்த சிலைகளில் நீரில் கரையக் கூடிய தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களை மட்டுமே பூச வேண்டும். அத்தகைய சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது.

மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். 
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com