தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்

தமிழகத்தில் 7 நகரங்களில் புதிதாக போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அவை அமையவுள்ளன.

தமிழகத்தில் 7 நகரங்களில் புதிதாக போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அவை அமையவுள்ளன.

அதற்கான முதல்கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நாட்டில் குஜராத், பிகார், மிúஸாரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டப்பூர்வமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

ஆய்வுத் தரவுகளின்படி இந்தியாவில் 14.6 சதவீதம் பேர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று கஞ்சாவுக்கு 2.8 சதவீதம் பேரும், ஹெராயின், ஒபியம் உள்ளிட்ட போதை பொருள்களுக்கு 4.5 சதவீதம் பேரும் அடிமையாகியிருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை 10-இல் 4 பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த எண்ணிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, சமூகத்தில் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயல் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.

மாநில அரசுடன் இணைந்து தேசிய சுகாதார இயக்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக  தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதைத் தவிர, கடலூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய இடங்களில் போதை மறுவாழ்வுக்கென பிரத்யேக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட அந்த மையங்களில் தலா 30 படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவ சிகிச்சை, உணவு, பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ.2 கோடிக்கும் மேல் அங்கு செலவிடப்படுகிறது. அவற்றைத் தொடர்ந்து  7 இடங்களில் புதிதாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை மறுவாழ்வு சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கும் தலா 30 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை சுகாதாராத் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அண்மைக் காலமாக இளைஞர்கள், பதின்பருவ சிறார்கள், பெண்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது.

மாநில அரசைப் பொருத்தவரை, போதை மறுவாழ்வுக்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பயனாக, தமிழகம் முழுவதும்  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு ஜூலை வரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com