சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த மழையில்  அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் தேங்கிய மழைநீர்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த மழையில்  அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதியில் தேங்கிய மழைநீர்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதில், குறிப்பாக சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அம்பத்தூர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூர்புரம், அடையாறு, போரூர், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், எழும்பூர், பாடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், சோழிங்கநல்லூர், பல்லாவரம், மீனம்பாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, தண்டலம் ஆகிய பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையில் குளிர்ந்த காலநிலை நிலவியது.

அதிகாரிகள் ஆய்வு: மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நீர் வடிந்து சென்றது. 

சில பகுதிகளில் மழை நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்தப் பணியை மாநகராட்சி துணை ஆணையர்கள் கோவிந்தராவ், குமாரவேல் பாண்டியன், மதுசுதன்ரெட்டி ஆகியோர் பார்வையிட்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com