சென்னையில் அணிவகுத்த பழங்கால கார்கள்

பழங்கால கார் கண்காட்சி, திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை நடிகை ரேவதி தொடங்கி வைத்தார். 
சென்னையில் பழங்கால கார்களின் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து  ஆர்வத்துடன் இயக்கிய நடிகை ரேவதி.
சென்னையில் பழங்கால கார்களின் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து  ஆர்வத்துடன் இயக்கிய நடிகை ரேவதி.

பழங்கால கார் கண்காட்சி, திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை நடிகை ரேவதி தொடங்கி வைத்தார். 

சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில்  நடத்தப்பட்டது.  இதில் 140க்கும் மேற்பட்ட கார்களும், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வானங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. 1920 முதல் 1970 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், எம். ஜி. , செவ்ரலெட், பென்ஸ், பி. எம். டபிள்யு, ஃபோர்டு, ஆஸ்டின் போன்ற உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் கார்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு இதில் இடம்பெற்றிருந்தன. 

குறிப்பாக மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய 1957 மாடல் டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனர் ஏ. வி. மெய்யப்பன் பயன்படுத்திய 1938 மாடல் வாக்ஸால் கார், ஜெமினி ஸ்டூடியோஸ் அதிபர் வாசன் பயன்படுத்திய வாக்ஸால் வெலாக்ஸ் என்ற 1956-ஆம் ஆண்டு மாடல் கார் போன்றவை மக்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், 70ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அவசர ஊர்தி வாகனம், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்து, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய சொகுசு கார்கள் என பல கார்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராயல் என்பீல்ட்ஸ் தலைமைச் செயல் அதிகாரி வினோத் தாசரி, சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட கார்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com