சரக்கு, சேவை வரியை (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வது மற்றும் ஜிஎஸ்டி தணிக்கை தொடர்பான கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வருடாந்திர ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதையொட்டி, தொழில் முனைவோர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், வரித் தொழில் சார்ந்தவர்களின் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு பட்டயக் கணக்காளர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பங்கேற்க கட்டணம் ரூ.1,400 ஆகும். இதில், பங்கேற்க விரும்புவோர் கருத்தரங்கம் நடைபெறும் இடமான கிண்டியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.