சென்னை

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி

16th Aug 2019 04:32 AM

ADVERTISEMENT


சென்னை அருகே திருமுல்லைவாயிலில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர்  உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம்,  வானாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (24). சென்னை, பெரியமேட்டில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த கோபிநாத், பாடி, ரெட்டி தெருவில் உள்ள  தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.
கல்லூரிக்கு  விடுமுறை என்பதால் திருமுல்லைவாயில் தென்றல் நகர் மேற்கு 20-ஆவது தெருவில் கட்டட வேலைக்கு கோபிநாத் புதன்கிழமை சென்றுள்ளார். 
அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கையில் எடுத்தபோது கோபிநாத் மீது மின்சாரம் பாய்ந்ததில், பலத்த காயமடைந்த அவர்   மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT