சென்னை

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

16th Aug 2019 04:31 AM

ADVERTISEMENT


சென்னை பள்ளிக்கரணையில் செல்லிடப்பேசி அதிக நேரம் உபயோகிப்பதைக் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். 
இவர் மகன் சஞ்சய் (18), அப்பகுதியில் உள்ள  தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். சஞ்சய் செல்லிடப்பேசியில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சஞ்சய் வீட்டின் கழிப்பறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT