திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: பயிற்சி மருத்துவர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

DIN | Published: 14th August 2019 04:18 AM

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட உள்ளனர்.
இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் பாதிக்கக்கூடிய சூழல் எழுந்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட  மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த ஒரு வாரமாக வகுப்புகளைப் புறக்கணித்து தர்னா போராட்டங்களையும், கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.
அதில், எம்பிபிஎஸ் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர்களும், புதன்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:
தேசிய மருத்துவ ஆணையத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. நெக்ஸ்ட் தேர்வைத் திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பது எங்களது பிரதானக் கோரிக்கை. அதை வலியுறுத்தியே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அதற்கு அரசு செவிமடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அதேவேளையில், அவசர சிகிச்சைப் பிரிவில் பயிற்சி மருத்துவர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னையில் பரவலாக மழை
சென்னையில் அணிவகுத்த பழங்கால கார்கள்
ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்
பள்ளிகளில் தேசிய பசுமைப்படை: இரு மடங்காக அதிகரிக்க முடிவு