திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அம்மா ரோந்து வாகனங்கள்: சென்னையில் விரைவில் அறிமுகம்

DIN | Published: 14th August 2019 04:23 AM
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட உள்ள அம்மா ரோந்து வாகனங்கள்.


சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் தமிழக காவல் துறையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இப்பிரிவின் தலைமை அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. ரவி உள்ளார். 
இந்தப் பிரிவின்கீழ் தமிழக காவல் துறையில் ஏற்கெனவே  உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில்,  மாநிலம் முழுவதும் செயல்படும் 201 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், சென்னை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவும்  இப்பிரிவின்கீழ் செயல்படுகின்றன. இந்தப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அம்மா ரோந்து வாகனம்: இந்நிலையில், இப்பிரிவுக்கான தொழில்நுட்ப வசதி, வாகன வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் புதிதாக இன்னாவோ கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் காவல் துறையில் இதுவரை இல்லாத வகையில் வெள்ளை, இளஞ்சிவப்பு (ல்ண்ய்ந்) வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் அம்மா ரோந்து வாகனம் (அம்ம்ஹ டஹற்ழ்ர்ப்) எனவும் எழுதப்பட்டுள்ளது. அதேபோல,  குழந்தைகளுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1098, பெண்களுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1091 ஆகியவையும் எழுதப்பட்டுள்ளன. 
இந்த வாகனங்களை சென்னையில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். இதைத் தொடர்ந்து, படிப்படியாக பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பள்ளிகளில் தேசிய பசுமைப்படை: இரு மடங்காக அதிகரிக்க முடிவு
சேமிப்புத் திட்டத்தில் பயன் பெற 23 புதிய சிறப்பு மையங்கள்
சூலூர்பேட்டை-தடா இடையே பொறியியல் பணி: இன்று முதல் 13 நாள்கள் ரயில் சேவையில் மாற்றம்
விநாயகர் சிலை அமைக்க ஒற்றைச் சாளர முறை: சென்னை காவல்துறை நடவடிக்கை
நுகர்வோர் உரிமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: நீதிபதி துரை.ஜெயச்சந்திரன்