திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

இதய நோய் பாதித்த பாக். சிறுமிக்கு சிகிச்சை

DIN | Published: 13th August 2019 04:31 AM


இதய நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் சிறுமியை அதி நவீன சிகிச்சை மூலம் சென்னை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா (14). இதயத் தசை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள ஃபோர்டீஸ் மலர் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். ஆயிஷாவின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதை உணர்ந்தனர்.  
இதையடுத்து, இதயத்துக்குச் செல்லும் நாளங்களுக்கு ரத்தத்தை செயற்கையாக உந்தித் தருவதற்கான சிறப்பு கருவியை அவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன், அடிப்படையில், 
ஃபோர்டீஸ் மலர் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், அச்சிறுமிக்கு எல்விஏடி எனப்படும் வென்ட்ரிகுலர் கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். தற்போது அச்சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னையில் அணிவகுத்த பழங்கால கார்கள்
சென்னையில் பரவலாக மழை
ரசாயனத்தால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்
பள்ளிகளில் தேசிய பசுமைப்படை: இரு மடங்காக அதிகரிக்க முடிவு