சென்னை

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு

11th Aug 2019 03:17 AM

ADVERTISEMENT

சென்னை காசிமேட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியாô வாயு கசிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஜஸ் கட்டி தயாரிக்கும் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு மீன்களைப் பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த ராயபுரம் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த தொழிற்சாலையில் அமோனியும் வாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்துக்கு வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. இந்த வாயு கசிவினால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT