தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது: தேர்தல் சிறப்பு டிஜிபி தகவல்

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என தேர்தல் சிறப்புப் பிரிவு அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது: தேர்தல் சிறப்பு டிஜிபி தகவல்


தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என தேர்தல் சிறப்புப் பிரிவு அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட 1.40 லட்சம் போலீஸார் 67,720 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இவர்கள் மாநிலத்தில் எந்த இடத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் பார்த்துக் கொண்டனர். 
தமிழகம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரையில்  சித்திரை திருவிழாவுக்கும், திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி கிரிவலத்தையொட்டியும் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணிகள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டன.  குடியாத்தம், கள்ளக்குறிச்சி, செங்கம் நகரம், அரியலூர், கீழ் விஷாரம் ஆகியப் பகுதிகளில் சில சம்பவங்கள் நடைபெற்றன. 
கீழ் விஷாரத்தில் திடீரென பெருங்கூட்டம் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினர் வானத்தை நோக்கி சுட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விரைந்து சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.  அனைத்து மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்து வருகிறார்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com