மக்களவைத் தேர்தல்: சென்னையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 38 வாக்குச்சாவடிகள்!

சென்னை மாவட்டத்தின் 3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பெண்கள் மட்டுமே பணியாற்றும், வாக்களிக்கும் 38 வாக்கு
மக்களவைத் தேர்தல்: சென்னையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 38 வாக்குச்சாவடிகள்!


சென்னை மாவட்டத்தின் 3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பெண்கள் மட்டுமே பணியாற்றும், வாக்களிக்கும் 38 வாக்குச் சாவடிகளும், 61 அதிநவீன வசதிகள் கொண்ட மாதிரி வாக்குச் சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தேர்தல், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலை யொட்டி,  913 இடங்களில் 3,754 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
சென்னையைப் பொருத்தவரை ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 05, 216 பேரும், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 59, 862 பேரும், திருநங்கைகள் 988 பேரும் என 38 லட்சத்து 66, 066 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 54, 646 பேர் அதிகம் உள்ளனர். 
பெண்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையிலும், புதிய பெண் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், முழுவதும் பெண்களே பணியாற்றக் கூடிய, பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடிய இளஞ்சிவப்பு நிறத்தினாலான 38 வாக்குச் சாவடிகளும், ஏர்கூலர் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட 61 மாதிரி வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுûகையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், ராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 3 வாக்குச் சாவடிகளும், தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சைதாப்பேட்டை சட்டப் பேரவையில் 2 வாக்குச்சாவடிகளும், மயிலாப்பூர், வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடிகளும், சோழிங்கநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் சட்டப் பேரவைத் 
தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடி என மொத்தம் 38 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுவர், பெண்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 
அதேபோல், வடசென்னை மக்களவைத் தொகுதியில் 24, தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 13, மத்திய சென்னை தொகுதியில் 24 என மொத்தம் 61 அதிநவீன மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com