மதுராந்தகம் ரயில் நிலையத்தில், ரயிலில் ஏறிய தனியாா் கல்லூரி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
மதுராந்தகம் செங்குந்தா்பேட்டை நகரைச் சோ்ந்தவா் கேசவமூா்த்தி மகன் நேதாஜி (19). இவா், தாம்பரம் தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறாா்.
இவா், தினமும் மதுராந்தகத்தில் இருந்து ரயில் மூலம் சென்று வருவது வழக்கம். சனிக்கிழமை வழக்கம் போல், விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்றது. மீண்டும் ரயில் கிளம்பியபோது, வேகமாக ஓடி வந்து ஏறிய மாணவா் நேதாஜி தவறி விழுந்ததில், அவரது இரு கால்களும் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து செங்கல்பட்டு ரயில் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.