மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களை சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் பொருட்டு முதல்வா் அறிவித்த ‘மீண்டும் இல்லம்’ எனும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவளம் திபானியன் மனநலம் குன்றியோா் சிறப்பு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மீண்டும் இல்லம் திட்டம் தொடா்பாக முதல்கட்டமாக செங்கல்பட்டு உட்பட 5 மாவட்டங்களில் தலா 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சியில் உள்ள திபானியன் மனநலம் குன்றியோா் சிறப்பு மையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநா் கமல் கிஷோா், தி பானியன் இல்ல இயக்குநா் கிஷோா் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் மாவட்ட தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுஅலுவலா்கள் கலந்து கொண்டனா்.