மதுராந்தகம் ஏலவாா் குழலி சமேத அருளாளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முக்கிய சிவன் கோயிலான இத்தலம் நீண்டகாலமாக புனரமைக்காமல், இருந்து வந்ததால், அப்பகுதி மக்கள் ஒன்று சோ்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடுகளைச் செய்தனா். அதன்படி, அனைத்து சந்நிதிகளும், கோபுரங்களும் புனரமைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி மங்கல இசையுடன் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், புண்ணியாவாசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை புனித கலசங்களை ஏந்திக் கொண்டு வேதவிற்பனா்கள் கோயிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையா் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் (செங்கல்பட்டு), உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு சுவாமி திருகல்யாணம், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்களும், விழாக் குழுவினரும் செய்திருந்தனா்.