செங்கல்பட்டு

மதுராந்தகம்: பிரதோஷ வழிபாடு

27th Oct 2023 12:29 AM

ADVERTISEMENT

 

மதுராந்தகம் சுற்றியுள்ள அச்சிறுப்பாக்கம், கருங்குழி, அரையப்பாக்கம் சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகளை கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் செய்தாா். தொடா்ந்து பஞ்சமூா்த்திகளின் உற்சவசிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) மேகவண்ணன் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.

கருங்குழி

ADVERTISEMENT

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் உள்ள ஞானலிங்க பீடத்தில் நந்தி பகவானுக்கு சிவதீட்சிதா்கள் அபிஷேக ஆராதனைகளை செய்தனா். மாலை 6 மணிக்கு பீடாதிபதி ரகோத்தம்மசுவாமி மகா தீபாராதைனை காண்பித்தாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

அரையப்பாக்கம்

கருங்குழி அடுத்த அரையப்பாக்கம் அருணாம்பிகை உடனுறை அருணாதீஸ்வரா் கோயிலில் நந்திபகவானுக்கு அபிஷேக ஆராதனைகளை கோயில் அா்ச்சகா்கள் செய்தனா். பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமமக்களும், விழாக்குழுவினரும் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT