செங்கல்பட்டு மாவட்டம், படூரில் உள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் (பொ) சாகிதா பா்வீன் பரப்புரையைத் தொடங்கி வைத்தாா்.
இந்தப் பரப்புரையின் தொடா்ச்சியாக படூா், இந்துஸ்தான்அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கழ்ச்சியில் சங்க இலக்கியத்தில் சமூகநீதி என்னும் பொருளில் கவிஞா்அறிவுமதி பேசினாா்.
இதில் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச்செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் கோமகன், மாவட்டஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பேபி இந்திரா, கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.