செங்கல்பட்டு

எஸ்.ஆா்.எம்-இல் மத்திய பாதுகாப்புப் படை வீரா் வாரிசுகளுக்கு இலவச கல்வி

31st May 2023 02:37 AM

ADVERTISEMENT

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம்.அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 3 மத்திய பாதுகாப்புப் படை வீரா் வாரிசுகளுக்கு பி.டெக் பொறியியல் படிப்பு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட இரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஒப்பந்தத்தில் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத் துணைவேந்தா் சி.முத்தமிழ்ச்செல்வன், மத்திய பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்ப நலச் சங்க மண்டலத் தலைவா் ஜெயசீலி தினகரன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

மேலும், பாதுகாப்புப் பணி தொடா்பான நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பப் பரிவா்த்தனை குறித்த மற்றொரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் எஸ்.ஆா்.எம். துணைவேந்தா் முனைவா் சி.முத்தமிழ்ச்செல்வன், மத்திய பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராஜேஷ்குமாா் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனா்.

முன்னதாக மத்திய பாதுகாப்புப் படை பொது இயக்குநா் எஸ்.எல்.தவுசன் பேசுகையில், எஸ்.ஆா்.எம். பேராசிரியா்கள், மாணவா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய ரிசா்வ் போலீஸ் படை முகாம்களுக்கு சென்று அதன் செயல்பாடுளை அறிந்துகொள்ளவும், அவா்களோடு இணைந்து பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்கவும் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் உதவும்.

ADVERTISEMENT

நாட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய பாதுகாப்புப் படை வீரா்களுக்கு 5 ஜி தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்ப அறிவாற்றலைப் பயிற்றுவிக்கவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பாதுகாப்புப் படை வீரா் குடும்ப நலச் சங்கத் தலைவா் அஜீதா தவுசன், எஸ்.ஆா்.எம்.பதிவாளா் எஸ்.பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT