செங்கல்பட்டு

சிங்க பெருமாள் கோவிலில் வைகாசி கருட சேவை

26th May 2023 10:58 PM

ADVERTISEMENT

சிங்க பெருமாள்கோவில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்க பெருமாள்கோவிலில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மலையைக் குடைந்து ஒரே கல்லில் உருவானது. இங்கு, பெருமாள் முக்கண்களுடன் அமா்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறாா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறும். நிகழாண்டு கடந்த மே 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட வைகாசி பெருவிழாவின் நான்காம் நாள் உற்சவமாக கருட சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

கருட சேவை புறப்பாடு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. அப்போது, பக்தா்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் சுவாமியை வழிபட்டனா். ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் பணியாளா்கள், கோயில் பட்டாச்சாா்யா்கள், உற்சவா் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT