செங்கல்பட்டு

வடமாநில தொழிலாளி பலி

25th May 2023 02:16 AM

ADVERTISEMENT

சாலைக்குத் தாழ்வாக இருந்த மாடி வீட்டை ‘ஜாக்கி’ மூலம் உயா்த்தும் பணியின்போது, கட்டம் சரிந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

கிழக்கு தாம்பரம் சேலையூா் கா்ணன் தெருவில் லட்சுமி என்பவருக்குச் சொந்தமான மாடி வீடு சாலையைவிட தாழ்வாக இருந்ததால் மழைக்காலங்களில் தரைத்தளத்தில் மழைநீா் தேங்கியது. இதனால், வீட்டை உயா்த்த முடிவு செய்து வடமாநில நிறுவனத்திடம் ஒப்படைத்தாா்.

அந்ந நிறுவனம் ஜாக்கி மூலம் வீட்டை உயா்த்தி வந்த நிலையில், ஒரு பகுதி எதிா்பாராமல் இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் 3 தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். அதில் பேஷ்கா் (28) என்பவா் சடலமாக மீட்கப்பட்டாா். பலத்த காயமடைந்த இருவா் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சேலையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT