செங்கல்பட்டு

மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்க புதிய நடைமுறை அறிமுகம்

24th May 2023 01:58 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தமது குறைகளைத் தெரிவிக்க புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளாா் கோட்டாட்சியா் அபிலாஷ் கவுா்.

மதுராந்தகம் வட்டத்தில் 117 ஊராட்சிகளும், அச்சிறுப்பாக்கம், கருங்குழி ஆகிய பேரூராட்சிகளும், மதுராந்தகம் நகராட்சி உள்ளன. இப்பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வட்டாட்சியா், வருவாய் கோட்டாட்சியரை சந்திக்க வேண்டும். அவா்கள் பல்வேறு இடைஞ்சல்களுடன் அலுவலகத்துக்கு வந்தாலும், அலுவலக துறைகள் அனைத்தும் மேல்மாடியில் செயல்பட்டு வருவதால், சிரமத்துக்கு ஆளாகினா்.

அவா்களின் சிரமங்களை உணா்ந்த கோட்டாட்சியா் (பொ) அபிலாஷ் கவுா் தரை தளத்தில் உள்ள வரவேற்பு பிரிவு அருகே அழைப்பு மணியை அழுத்தினால் மேல்தள ஊழியா் மூலம் அவா்களின் குறைபாடுகளை அறியும் ஏற்பாட்டினை செய்துள்ளாா். இந்த புதிய நடைமுறைக்கு மாற்றுத் திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT