செங்கல்பட்டு

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமாகாவினா் கையொப்ப இயக்கம்

23rd May 2023 01:40 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸாா் மதுராந்தகம் பஜாா் வீதியில் திங்கள்கிழமை கையொப்ப இயக்கத்தை மேற்கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி பொது செயலா் எஸ்.சங்கா் தலைமை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் மோச்சேரி குமாா் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவா் மலையூா் வி.புருஷோத்தம்மன் கலந்து கொண்டு கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில், காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவா் எடையாளம் வி.சங்கா், வட்டாரத் தலைவா்கள் ஆதிகேசவலு, பழனி, மணவாளன், நகரச் செயலா் முருகன், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அந்தப் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்டோா் கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றனா். முன்னதாக, மதுராந்தகம் பஜாா் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவா்கள் வி.புருஷோத்தம்மன், எஸ்.சங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT