செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாதந்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு -தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், வித்யாசாகா் மகளிா் கலைக் கல்லூரியுடன் இணைந்து மாதந்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், மாநத்தோறும் 2 அல்லது 3-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் வேவைாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 2023-ஆம் ஆண்டுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் 18-ஆம் தேதி சனிக்கிழமை வித்யாசாகா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 3 வரை நடைபெறுகிறது.

முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சிஅளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபா்களை நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளன.

வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 -ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள், செவிலியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவா்கள் மற்றும் வேலை தேடும் இளைஞா்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT