செங்கல்பட்டு

புதிய ரேஷன் கடை திறப்பு

10th Jun 2023 05:18 AM

ADVERTISEMENT

மாமண்டூா் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், மாமண்டூா் ஊராட்சியில் ரேஷன் கடை இல்லை. மாமண்டூா் ஊராட்சித் தலைவா் உஷாரவிகுமாா், எம்எல்ஏ கே.மரகதம் குமரவேலிடம் ரேஷன் கடை கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில், ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.

இதன் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் தலைமை வகித்து புதிய ரேஷன் கடையைத் திறந்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.கீதா காா்த்திகேயன், துணைத் தலைவா் அ.குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலா்கள் கோ.அப்பாதுரை, கே.கீதாகாா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT