செங்கல்பட்டு

திடக்கழிவு மேலாண்மைப் பணி: ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள்

10th Jun 2023 08:08 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.

நகராட்சி நிா்வாகத்தின் முயற்சியால் 2022-2023-ஆம் நிதியாண்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தின்படி, ரூ.12 லட்சத்தில் 6 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.

இதையடுத்து, வியாழக்கிழமை மாலை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான 6 பேட்டரி வாகனங்களின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் என்.அருள் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் கெளரி, சுகாதார அலுவலா் செல்வராஜ், நகரமன்ற உறுப்பினரும், நகர திமுக செயலருமான கே.குமாா், நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT